கொடி


மூவர்ணக் கொடி
அறுக்கிறது
தமிழன் தொப்புள்கொடி
உதிர்த்துப் போன பூக்களில்
தேசத் தாயின் திலகத்தில்
வெடித்துச் சிதறிய எம் தாய்களின் சூல்கள்
கருவறைச் சதைகளோடு

கதறல்களுக்கு காதுகளையும்
பிணக்குருதி வாடை சுவாசிக்கவும்
ஆணையிடுகிறது சுதந்திரக் கொடி
அனுமதித்த அளவோடு அழ

மறத்துப் போகாத உணர்வெஞ்சியிருப்பின்
மரித்துப் போகலாம்
இல்லையேல்
மண்டியிடாது கொடி கிழித்துப் போகலாம்
நாளை நம் கொடி

அறுபடாதிருக்க

5 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

//கதறல்களுக்கு காதுகளையும்
பிணக்குருதி வாடை சுவாசிக்கவும்
ஆணையிடுகிறது சுதந்திரக் கொடி
அனுமதித்த அளவோடு அழ
//

:(

முதலில் தமிழன் அதன் பிறகே இந்தியன் என்ற உணர்வு இல்லாதவரையில் நாமெல்லாம் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியது தான். தேசியம், மதத்துக்கும் சாதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் தாய்மொழிக்கும், இனத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது இயல்பற்ற முரண்.

Dharan said...

mmmm

" உழவன் " " Uzhavan " said...

//மூவர்ணக் கொடி
அறுக்கிறது
தமிழன் தொப்புள்கொடி//

தேசியக் கொடியையே சற்று கேவலமாகக் காணவைக்கிற வரிகள்.

ஜோ/Joe said...

இயலாமையின் விளிம்பில் தமிழினம் :((

குழலி / Kuzhali said...

ரசிக்க இயலாத கவிதை அதாவது நல்ல கவிதை என்று சொல்லி மகிழ்ச்சியோடு பாராட்ட முடியாத அளவு துக்கத்தை ஏற்படுத்தும் கவிதை

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP