காங்கிரசு சிறையில் திராவிடச் சிங்கம்


உண்மையான தேசியம் என்பது தேச மக்களின் சுயமரியாதையைப் பொறுத்ததேயல்லாமல் சிலரின் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம் ஏற்படும் வழியல்ல. உண்மையான அரசியல் என்பது எல்லா மக்களும் சமமாய் அனுபவிக்கக் கூடியதாயிருக்குமே ஒழிய, ஒருவருடைய ஆதிக்கத்துக்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதல்ல - தந்தைப் பெரியார்.

திராவிட நாடும், ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் என்றும் வளர்ந்த திராவிடத்தின் உடன்பிறப்புகள் இன்று சுண்ணாம்புகளை நுகர்ந்து பார்த்தும், குருடர்களுக்கு பார்வை கொடுத்தும், கிழ சிங்கத்தின் கர்ஜனையில் சிலிர்த்துப் போய் சாதி பிரிக்கும் புரோகிதகர்களாக புதுப் பரிமாணம் எடுத்து திராவிடம் வளர்க்கிறார்கள். திராவிடத்தின் மொத்த குத்தகைதாரர்களின் புண்ணியத்தில் இன்று பலர் வன்னியர்களாகவும், நாயக்கர்களாகவும் சாதியேற்றம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு சாதிமாற்றத்திற்கு உள்ளானவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமா என்பதை கேட்டுச் சொன்னால் பயனாக இருக்கும்.

ஈழத்தமிழர் விசயத்தில் உடன் பிறப்புகளுக்கு தன் மீதிருந்த உறுத்துதல்களை களையவும் கழகத்திற்கு வாக்களிப்பதில் இருந்த நெருடலை போக்கவும் நடத்திய நாடகம் அவர் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தி இருக்கிறது. இனி உடன் பிறப்புகள் எந்த வித குற்ற உணர்வுமின்றி உதய சூரியனுக்கும், கைக்கும், முத்திரையிட்டு சரித்திரம் படைப்பார்கள். நட்சத்திர முத்திரைகளில் தெரியும் அவர்தம் சாதிகள். கலைஞர் மீது கடுமையான விமர்சனங்களைச் சமீபத்தில் எழுப்பியிருந்தாலும் நேற்றுக் காலை தொலைக்காட்சியில் படுக்கையில் பார்த்தபோது மனம் லேசாக துணுக்குற்றதை மறைக்க விரும்பவில்லை. இந்த நெகிழ்வுணர்ச்சியை ஏற்படுத்தியது அவரது அரசியலின் வெற்றி எனினும் பெரும் தமிழினத்தின் தலைவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெரும் தலைவன் மிகவும் தரம் தாழ்ந்து தமிழனத்தின் மீது பேரவலைத்தை ஏற்படுத்திய காங்கிரசின் துரோகத்தை மறைக்க சேவகனாய் அரிதாரம் ஏற்ற அவலத்தைத்தான் காண முடிந்தது.

கலைஞரிடமும் அவர் உடன்பிறப்புகளிடமும் காணக்கூடிய ஒரு முக்கியப் பண்பு தாம் செய்யும் தவறுகளைப் பற்றி பேசும் போது அதற்குரிய பதிலைத் தராமல் பிறிதெருவரின் தவறை மட்டும் குறிப்பிடுவார்கள் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என்றும், கொள்கையற்றவர்கள் என்றும் தமிழினத்தை வஞ்சித்தவர்கள் என்றும் தாமே உத்தமர்கள் என்றும் தனக்குத் தானே அழைத்துக் கொண்டு பெருமிதம் அடைவார்கள். ஈழத் தமிழர்களை வஞ்சித்ததில் திமுகவிற்கு எத்தனை பங்கிருக்கிறதோ அதற்கு குறையாத பங்கு ஆட்சியில் பங்கேற்ற பாமகவிற்கும் உண்டு. அன்புமணியை நோக்கி விரலை நீட்டுபவர்கள் மற்ற விரல்கள் தங்களை நோக்கி நீள்வதை சுட்டிக் காட்டுபவனை சாதிச் சட்டகத்துள் அடக்கி புதுத் தத்துவம் பேசிவருகிறார்கள்.

நேற்றைய நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே புனிதர் பிரணாப் முகர்ஜி நாங்கள் இலங்கைக்கு ‘’Non Lethal Weapons’’ கொடுத்தோம் என்று சொன்னானே, சகோதரயுத்தம் பற்றி பேசியவர்கள் தாங்களும் அத்தைகய சகோதர யுத்தக் காரர்கள் என்பதை மறந்து விட்டார்கள். நளினியை சிறையில் பிரியங்கா பார்த்ததிலிருந்து தொடங்கிய ஈழத் தமிழர் அழிப்பு காதையில் தன் ஆத்ம நண்பர் சிவாஜி கணேசனையும் விஞ்சி விடும் ஒரு அதி அற்புத மிகைப்படுத்தாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் கலைஞரைப் பார்த்து உடன்பிறப்புகள் வேண்டுமானால் கிழச் சிங்கமாய் கொண்டாடலாம். ஏனையோருக்கு அந்தத் தேவையில்லை. சிங்கமாகவே இருந்தாலும் இப்போது அது காங்கிரசுக் கொட்டகைக்குள் அடைபட்டு கிடக்கிறது. மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் தமிழக அரசு அதிகாரத்தில் இருந்த காங்கிரசை தூக்கியெறிந்த இயக்கத்தின் தலைவர் காங்கிரசுக்கு எதிராக இன்று அதே போன்றதொரு எழுந்த எழுச்சியின் போது அவர்களைக் காக்கும் கவசமாக மாறிப்போனதே அவர் முன்னெடுத்த கொள்கையின் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது.

ஜெயலலிதா தமிழினத்தின் நிரந்திர விரோதியாக இருப்பத்தால் தானே உங்கள் பின்னால் திரண்டோம், ஆட்சியதிகாரத்தில் சுரண்டல்களில், அடக்குமுறைகளில் அவருக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று நிருபிக்கும் போது உங்கள் இருவரையும் ஒரே எடைக்கல்லில் வைத்துத்தானே பார்க்க முடியும். காங்கிரசு அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பட்டை மக்களிடம் எடுத்துச் சொன்னவர்களின் கருத்துச் சுதந்திரத்தை நெறித்துவிட்டு ஜனநாயக உரிமைகளைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அதிலும் நாங்கள் நினைத்திருந்தால் அரசு வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நீட்டித்திருக்கு முடியாதா? புரிந்து கொள்ளுங்கள் எங்கள் கருணை உள்ளத்தை என்று உரைப்பது ஆட்சி சுகத்திற்காக எங்கள் வசதிக்காக நாங்கள் செய்யும் அடக்குமுறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் அடிமைகளே என்ற ஆண்டைகளின் மொழியாகத்தான் இருக்கிறது. சுதந்திரம் என்பது தவணைகளில் கிடைக்கும் உரிமைதானோ??

மழைவிட்டும் விடாத தூவாணத்தில் சிதறும் பிணங்களை எண்ணாது கலைஞரின் சாதனைக்காக மகிழ்ந்து கொள்ளுங்கள்.

மக்களுக்காக மக்களோடு இருப்பவன் ஆட்சி அதிகாரத்தை எதிர்பார்த்திருத்திருக்க மாட்டான்.

ஆனால் மரண வியாபாரிகளின் அடிமைச் சிங்கங்கள்???

17 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

உடன் பிறப்புகளின் அருவெறுப்புகள் எப்போதும் நடப்பது தானே. முன்பு ஞானியை பூணூல் என்று விமர்சித்தனர். திராவிட சித்தாந்தந்திற்கும் திமுகவும் தொடர்பற்றுப் போய் ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம திராவிடம் பற்றிப் பேச திமுகவின் சான்றிதழ் தேவை இல்லை. அதைக் கொடுக்கும் தகுதியும் அவர்களிடம் இல்லை.

தாம் திமுக 'தொண்டன்'தான் கருணாநிதிக்கு ஆதரவாகவும், ஒத்து ஊதலாகவும் தான் பேச முடியும் என்று சொல்லிவிட்டு எழுதினால் யாரும் கேட்கப் போவதில்லை

பதிவர் நண்பர் என்ற வகையில் பார்த்துப் பழகுகியவர் என்பதை விட ஒருவன் என்ன கட்சியைச் சேர்ந்தவர் என்று புரிந்து கொண்டு பழகுவதே நல்லது. ஏனென்றால் பதிவர் என்கிற நட்பைவிட அவர்களின் கட்சி விசுவாசத்திற்கே முன்னுரை கொடுத்து அசிங்கப் படுத்தவும் தயார் ஆகிவிடுகிறார்கள்.

:(

- பட்டம் பெறப்பட்ட ஒருவன்

தருமி said...

//உங்கள் இருவரையும் (திமுக & அதிமுக) ஒரே எடைக்கல்லில் வைத்துத்தானே பார்க்க முடியும்//

நியாயமான வார்த்தை.

திரு (யோ.திருவள்ளுவர்) said...

//காங்கிரசு அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பட்டை மக்களிடம் எடுத்துச் சொன்னவர்களின் கருத்துச் சுதந்திரத்தை நெறித்துவிட்டு ஜனநாயக உரிமைகளைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அதிலும் நாங்கள் நினைத்திருந்தால் அரசு வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நீட்டித்திருக்கு முடியாதா? புரிந்து கொள்ளுங்கள் எங்கள் கருணை உள்ளத்தை என்று உரைப்பது ஆட்சி சுகத்திற்காக எங்கள் வசதிக்காக நாங்கள் செய்யும் அடக்குமுறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள் அடிமைகளே என்ற ஆண்டைகளின் மொழியாகத்தான் இருக்கிறது.//

நச்!

ஈழப்பிரச்சனையில் தனது சுயநலத்திற்காக சோனியாவிடம் சரணாகதியாகி 'அண்ணல் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்' பழமொழி சொன்னார். திண்ணையை அவர் வைத்துக்கொள்ளட்டும். வீட்டை நாம் பார்த்துக்கொள்வோம்.

ஜோ/Joe said...

மறுக்க எதுவுமே இல்லை :((

We The People said...

உங்க சாதி என்ன சார்! அப்ப தான் திட்ட வசதியா இருக்கும், இல்லை என்றா பார்ப்பான் (அ) இப்பொழுதுக்கு வன்னியர் கூட்டணி ஓங்குக தான் திட்டத்தோனும்..

:)

தீப்பெட்டி said...

ம்..ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.

அஹோரி said...

உங்கள் பதிவு ஒவ்வொரு உடன் பிறப்பும் ( ரா வ சொல்லணும் னா அடிவருடிகள் ) படிக்க வேண்டிய ஒன்று. பாராட்டுக்கள்.

முத்துகுமரன் said...

கொள்கை வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர முடியும். பெரியாரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பாடம்.

பெரியாரை பின் தொடர்புவர்களுக்கு நட்பை மதிக்கத் தெரியவில்லை என்றால் அது வருத்தத்திற்குரிய விடயம்.

திராவிட முன்னேற்ற கழகப் பெயரில் மட்டுமே திராவிடம் எஞ்சியிருக்கும் இன்னும் சில நாட்களில் தற்போது தேமுதிகவில் திராவிடம் இருப்பது போல்..

வருகைக்கு நன்றி கோவி

முத்துகுமரன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தருமி

நன்றி திரு. திண்ணைகளுக்காக வீட்டையே எரித்து விடுபவர்களிடம் இருந்து வீட்டைக் காப்பது உணர்வாளர்களின் கடமை. திராவிடத்தை முன்னெடுத்துச் செல்ல திமுக வினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

முத்துகுமரன் said...

//மறுக்க எதுவுமே இல்லை :((//

நன்றி ஜோ. இந்த சூழல் வருமென்று யார்தான் எதிர்பார்த்தாகள்.

என் சாதியை கண்டிபிடிக்கும் பொறுப்பை தாசில்தார்களிடமே விட்டு விடுகிறேன். நீண்ட நாட்களாயிற்றே! நலமா ஜெய்.

தீப்பட்டி முதல் வருகைக்கு நன்றி. நடப்பவை எல்லாம் நன்மைக்கே :-)

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஹோரி

தமிழ் சசி / Tamil SASI said...

முத்துக்குமரன்,

தெளிவான கருத்துக்களுக்கு நன்றி.

லக்கிலுக் said...

முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)

முத்துகுமரன் said...

//முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)//


லக்கி அக்கறைக்கு நன்றி

தமிழினத் தலைவர் மரண வியாபார காங்கிரசு சிறையில் அடைபட்டு கிடப்பதைவிட இது ஒன்றும் அவலமில்லை.

நியோ / neo said...

முத்து,

நானும் இதுபோன்றதொரு பதிவை இட்டிருக்கிறேன்.

http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html

உங்கள் உணர்வோடு ஒத்துப் போகிறேன்.

Dharan said...

//லக்கிலுக் வெள்ளி, மே 01, 2009 11:37:00
முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)//

வீ தி ப்யூப்புள் இங்கே பின்ணூட்டமிடமால் செயெந்திரர் பற்றிய அலசல் பதிவுக்கா பின்னூட்டமிடுவார்??

லக்கி, முத்துகுமரனை வைத்து காமெடி கீமெடி எதுவும் பண்ணலேயே??

We The People said...

//முத்துக்குமரன்!

வீ தி ப்யூப்புள் போன்றவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுப் பின்னூட்டம் போடக்கூடிய அவலநிலை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை :-)//

ஹா! ஹா! சூப்பருடா சாமீ!!!

ஏன் லக்கி முத்துக்குமரனுக்கு ஆதரவு பின்னூட்டம் போட ஏதாவது காண்ட்ராக்ட் எடுத்திருந்தீங்களோ??

We The People said...

//வீ தி ப்யூப்புள் இங்கே பின்ணூட்டமிடமால் செயெந்திரர் பற்றிய அலசல் பதிவுக்கா பின்னூட்டமிடுவார்??
//

தரண் நானே எழுதியிருக்கிறேன் செயெந்திரர் பற்றிய அலசல் பதிவு... கேனத்தனமா பேச ஒரு அளவு வைக்கனும்...

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP