அஞ்சலிப் பதிவுகளை நிறுத்துங்கள்

இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் குறித்தான அஞ்சலி பதிவுகளை நிறுத்துங்கள். மரியாதை தெரிவிக்கும் சம்பிரதாய சடங்குகளை கொஞ்ச நேரம் தூக்கி எறியுங்கள். பாதுகாப்பு வலையப் பகுதியில் சிக்கியிருக்கும் இன்னும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை தடயம் இல்லாது கொன்றொழிக்க முனையும் இலங்கை அரசின் நச்சுப் பரப்புரைகளுக்கு இரையாகாதீர்கள். உண்மையை நீண்ட காலத்திற்கு மூடி வைக்க இயலாது. இருள் விலகும். அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்காக விடாது குரலெழுப்புவோம். போராடிக் கொண்டிருப்பவர்களை நம் எழுத்துகளால் சாகடிக்க வேண்டாம்.

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

திகழ்மிளிர் said...

உண்மை நண்பரே

லோகு said...

இந்த பதிவுகள் எல்லாமே செய்தி கேட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல், ஆற்ற முடியாத துக்கத்தில், நனைந்த கண்களோடு எழுதப்பட்டவை..

இருந்தாலும் உண்மை நிலவரம் தெரியும் வரை அவசர பட கூடாதென எனது அந்த பதிவை நீக்கி விட்டேன்..

♥ தூயா ♥ Thooya ♥ said...

உங்கள் பதிவு மிக தேவை..நன்றி

RAJESH said...

thank u sir

Suresh Kumar said...

வீண் வதந்திகள் என்றே நான் நினைக்கிறேன் நேற்றும் இன்றும் மிக பெரிய மனித அவலம் அங்கெ நடந்து கொண்டிருக்கிறது . மேற்குலக நாடுகளின் கண்களை மறைக்கவே சிங்களம் இது போன்ற வதந்திகளை பரப்புகிறது என நினைக்கிறேன் .

அரவிந்தன் said...

இந்த பதிவுகள் எல்லாமே செய்தி கேட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல், ஆற்ற முடியாத துக்கத்தில், நனைந்த கண்களோடு எழுதப்பட்டவை..

இருந்தாலும் உண்மை நிலவரம் தெரியும் வரை அவசர பட கூடாதென எனது அந்த பதிவை நீக்கி விட்டேன்//

நானும் அப்படித்தான் பதிவிட்டேன்.தற்பொழுது நீக்கிவிட்டேன்

J said...

விடுதலைபுலிகள் ஆயுதங்களை கிழே போடுவதாக
கூறி 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகிவிட்டது

இன்னும் உலகச்சமுதாயம் எதை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது
சிங்கள ராணுவ்ம்
தமிழ்ச்சமுதாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது

அனைவரும் நமது கவலைகளை தெரிவித்து கொண்டிராமல்
நமது மன அழுத்தங்களை இப்பொழுது
உலகச்சமுதாயத்திறகு கொடுக்கவேண்டிய தருணம் இது

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

எனக்குத் தெர்ந்த தகவலின் படி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் இலங்கைக்கு வெளியே.


......

முத்து, உங்க கவிதை நல்லா இருக்குன்னு ஒருத்தர் சொல்லிட்டார். அதனால இந்த வாரமும் உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
http://pesumkavithai.blogspot.com/2009/05/blog-post.html

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP