பதிவர் அனுராதா அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள்


காலம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று பதிவர் அனுராதா அம்மாவிற்கு முதலாம் ஆண்டு நினைவுநாள். மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த தருணத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரது பதிவுகள் அதன் உயரிய நோக்கமும் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவை.

அவர் மறைவின் போது தமிழ்மணம் வெளியிட்ட அறிவிப்பை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறேன்.

*
புற்றுநோயுடன் போராடிக் கொண்டே கொடிய அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை தன் பதிவின் மூலம் நமக்கு அளித்து வந்த பதிவர் அனுராதா தன்னுடைய துன்பத்திலிருந்து இன்று விடுதலை அடைந்தார். இன்று காலை 9.52 மணிக்கு அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இருப்பினும் அவருடைய எழுத்து எப்பொழுதும் நம்முடன் இருந்து கொண்டேயிருக்கும்.

அவருடைய மறைவினால் துயருற்றிருக்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்மணம் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த பதிவர் அனுராதா போன்றவர்களின் உயிருள்ள எழுத்துக்கள்தான் வலைப்பதிவுகளின் வெற்றியையும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவையையும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

*
எந்த விதக் கொண்டாட்டங்களுமின்றி நகர்கின்றது எனது பிறந்த நாள்

7 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

SanjaiGandhi said...

அஞ்சலியில் பங்கு கொள்கிறேன்.


உங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் முத்துக்குமரன்.

கோவி.கண்ணன் said...

நினைவு கூர்வதற்கு பாராட்டுகள்.

அனுராத அம்மா என்றும் பதிவர்களின் மனதில் வாழ்பவர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களுக்கு அஞ்சலிகள்.நினைவு கூர்ந்து பதிவிட்டிருக்கிறீர்கள்.. நல்லது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களுக்கு அஞ்சலிகள்.நினைவு கூர்ந்து பதிவிட்டிருக்கிறீர்கள்.. நல்லது...

சந்தனமுல்லை said...

எனது அஞ்சலிகளும்!!

ஜோசப் பால்ராஜ் said...

ஒரு வருடம் ஆயிருச்சா?

அணுராத அம்ம்மா தனது உடல் வேதனையின் போதும் தொடர்ந்து எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றவர்.

மறக்க முடியாத அற்புத பெண்மணி அவர். அம்மையாருக்கு என் அஞ்சலிகள்.

shirdi.saidasan@gmail.com said...

brave woman

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP