உரக்கச் சொல்லாதீர் அண்ணா


உன்னோடு புதையுண்டதறியாது
உரக்கச் சொல்லாதீர்
கல்லறைக்குள்ளிருந்தும்
இன உணர்ச்சி
திராவிடம்
பகுத்தறிவு
சுதந்திரம்
சுயாட்சி
தமிழ்''நாடு''
அடையாளம்
தொப்புள்கொடி...

இறையாண்மை குலைத்த
தேசத்துரோகியாகிப் போவாய்
உன் கொள்கை வ(ப)ற்றிய தம்பியின்
''கை'' களால்

அஞ்சலி - திரு.Y.S. ராஜசேகர ரெட்டி


ஆந்திர மாநில முதல்வர் திரு Y.S. ராஜசேகர ரெட்டி (1949 -2009) நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து இருக்கிறார். ஏறத்தாழ 27 மணி நேர தேடுதலுக்குப் பின் அவரும் அவருடன் பயணம் செய்த மற்ற நால்வரும் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஆந்திரமக்களுக்கும் மற்றும் விபத்தில் மரணமடைந்த முதன்மைச் செயலாளர் திரு சுப்ரமணியம், பாதுகாப்பு அதுகாரி AS.வெஸ்லி, விமானிகள் SK.பாட்டியா, MS.ரெட்டி ஆகியோர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது அரசு செய்த மக்கள் நலத்திட்டங்களுக்காகவே அவர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது முக்கியமானது. நல்ல தலைவர்களை இது போல் விபத்துகளில் இழப்பது நாட்டிற்கு பேரிழப்பே!


Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP