அஞ்சலி - திரு.Y.S. ராஜசேகர ரெட்டி


ஆந்திர மாநில முதல்வர் திரு Y.S. ராஜசேகர ரெட்டி (1949 -2009) நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்து இருக்கிறார். ஏறத்தாழ 27 மணி நேர தேடுதலுக்குப் பின் அவரும் அவருடன் பயணம் செய்த மற்ற நால்வரும் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஆந்திரமக்களுக்கும் மற்றும் விபத்தில் மரணமடைந்த முதன்மைச் செயலாளர் திரு சுப்ரமணியம், பாதுகாப்பு அதுகாரி AS.வெஸ்லி, விமானிகள் SK.பாட்டியா, MS.ரெட்டி ஆகியோர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது அரசு செய்த மக்கள் நலத்திட்டங்களுக்காகவே அவர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது முக்கியமானது. நல்ல தலைவர்களை இது போல் விபத்துகளில் இழப்பது நாட்டிற்கு பேரிழப்பே!


2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

SanjaiGandhi said...

சிறந்த தலைவரை இழந்து தவிக்கிறோம்.

எங்கள் துக்கத்தில் பங்கு கொண்ட உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் முத்துக்குமரன்.

திரு/thiru said...

சந்திரபாபு நாயுடு அமெரிக்க நிறுவனங்களின் ஆலோசனையை பெற்று 'ஹைடெக்' முதல்வராக ஆந்திர விவசாயிகளின் வாழ்வை நிர்மூலமாக்கிய நிலையில் திரு.ராஜசேகர ரெட்டி முதல்வராகியிருந்தார். தென்மாநில முதல்வர்களில் அவர் எளிமை நிறைந்தவர். மக்களுக்கான திட்டங்களை முன்வைத்த நல்ல மனிதர். இழப்பு வருத்தத்திற்குரியது!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP